2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மீள்குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்பட வேண்டுமென வசவிளான் மக்கள் கோரிக்கை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வசாவிளான் பகுதியில் தாம்  மீளக்குடியேற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் யாழ்.  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசாவிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மல்லாகம் நீதிமன்ற வீதியிலுள்ள தமிழரசுக் கட்சிக் கிளைக் காரியாலத்தில், மாவை சேனாதிராசாவை சந்தித்துக் கலந்துரையாடிய வசாவிளான் மக்கள் சார்பிலான ஒரு குழுவினர்  இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர்.


ஏற்கெனவே வசாவிளான் மத்திய மகாவித்தியாலயம் இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டபோதிலும்,  பொதுமக்கள் குடியேறுவதற்கு அனுமதியளிக்கப்படாத நிலைமை அங்கு காணப்படுகின்றது. இதனால் மாணவர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

தற்போது அப்பகுதியிலுள்ள மக்கள் இடம்பெயர்ந்து பல வருடங்களானபோதிலும்,  சிரமத்திற்கு மத்தியிலேயே வாழ்கின்றனர்.
நலன்புரி நிலையங்களில் வாழும் மக்களுக்கு ஒரளவுக்கேனும் அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைக்கின்றபோதிலும்,  நலன்புரி நிலையங்கள் தவிர வெளியிடங்களில் வாழும் இடம்பெயர் மக்களுக்கு அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகள் கிடைப்பதில்லை .

எனவே, வசவிளானிலுள்ள பாடசாலை இயங்குவதற்கு அனுமதியளிக்கப்பட்டதுபோன்று,  தம்மையும் அங்கு மீளக்குடியேறுவதற்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கை எடுக்குமாறு அம்மக்கள் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X