2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

பருத்தித்துறையில் டொல்பின் மீன் வெட்டிய சந்தேக நபர்கள் கைது

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 27 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கர்ணன்)

பருத்தித்துறை, கற்கோலகத்தில் டொல்பின் மீனை வெட்டிய ஐந்து பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நிதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை டொல்பின் மீனைப் பிடித்து வெட்டிக்கொண்டிருந்த சந்தெக நபர்கள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய இவர்கள் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இவர்கள் பருத்தித்துறை நீதவான் ஜோய் மகில மகாதேவன் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டதை அடுத்து அவர்களை விடுதலை செய்யுமாறு நீதிவான் உத்தவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான மீள் விசாரணை எதிர்வரும் 31ஆம் திகதி நடைபெறவுள்ளதுடன் வெட்டப்பட்டதாகக் கூறப்படும் டொல்பின் மீனை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X