2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வடமாகாணசபை அலுவலகங்கள் ஜனவரி முதல் இயங்குவதற்கான ஏற்பாடு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 27 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வடமாகாணசபையின் அனைத்து அலுவலகங்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்குள் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் திறந்துவைப்பதற்கான ஏற்பாடுகள்   மேற்கொள்ளப்படவுள்ளன. அதில் மாகாண கல்வி அமைச்சின் அலுவலகமும் அடங்குவதால் இப்பிரதேசங்களின் கல்வி வளர்ச்சியை முன்னெடுப்பதில் இலகுவாக இருக்குமென ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

காரைநகரில் இன்று திங்கட்கிழமை கோட்டக் கல்வி அலுவலகத்; திறப்பு விழாவில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

இதுவரை காலமும் திருகோணமலையில் இயங்கி வந்த வடமாகாணசபைகளின் அலுவலகம் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியின் முயற்சியின் பயனாக யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் தங்களுடைய அலுவலகங்களை திறந்து பணியாற்றவுள்ளது. எனவே, இனிவரும் காலங்களில் வடமாகாணத்தின் பல்வேறு துறைகள் அபிவிருத்தி பணிகளில்; இலகுவாகவும் விரைவாகவும் மேற்கொள்ள முடியும். காரைநகர் மக்களைப் பொறுத்தவரை இன்று ஒரு மகிழ்ச்சியான நாள.; ஏனெனில் இதுவரை காலமும் ஊர்காவற்துறை வலயக் கல்வி அலுவலகத்தின் கீழ் தங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வந்த மக்கள் இனிமேல் தங்களுக்கென்று தனியான அலுவலகம் மூலம் பயன்பெறவுள்ளனர். ஒரு காலத்தில் கல்வியில் முன்னேற்றகரமாக இப்பிரதேசங்கள் மீண்டும் பழைய நிலைக்கு செல்ல வேண்டும். அதற்கு நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும் என்பது மட்டுமன்றி, நேர்த்தியான கல்விசார் நிர்வாக கட்டமைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

தேசிய ரீதியான அபிவிருத்திக்கென தெரிவான பாடசாலைகளில் காரைநகர் தியாகராஜா மகாவித்தியாலயமும் உள்ளடங்கியதை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மேலும் ஆளுநரிடம் சந்திரகுமார் விடுத்த கோரிக்கைக்கமைய அப்பாடசாலையின் அபிவிருத்திக்கு ஆளுநர்; 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதாக ஆளுநர்  இங்கு அறிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X