Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 07:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
இளவாலை வடமேற்கு மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் அவர்களது தேவைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடலொன்று வலித்தூண்டல் பகுதியில் நடைபெற்றது.
வலித்தூண்டல் அன்னம்மாள் தேவாலயத்தில் நேற்று திங்கட்கிழமை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில,; மீள்குடியேற்றப்பட்டுள்ள அப்பகுதி மக்களின் குறைநிறைகள் தொடர்பி;ல் ஆராயப்பட்டன.
நிரந்தர வீட்டுத்திட்டம், குடிநீர், கல்வி, சுகாதாரம், மருத்துவம், பொதுக்கிணறுகள் சுத்தம், வீதிப்புனரமைப்பு, போக்குவரத்து, மின்சாரம், விவசாயம், கடற்தொழில் உள்ளிட்ட விடயங்கள் குறித்து அமைச்சரிடம், அப்பகுதி மக்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்வைத்;தனர்.
இந்நிலையில், நிரந்தர வீட்டுத் திட்டம் அமைக்கப்படும் வரையில் அம்மக்களுக்கு கூரைத்தகடுகள், சீமெந்து மற்றும் தடிகள் வழங்குவதற்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. உடனடியாக கிணறுகள் சுத்தம் செய்து பிளாஸ்டிக் தாங்கிகள் வழங்கப்பட்டு குடிநீர் வசதிகளை மேற்கொள்வதென்றும், சேதமடைந்துள்ள பாடசாலைக் கட்டிடங்களைத் திருத்தி கல்வி நடவடிக்கைகளைப் படிப்படியாக சீரமைப்பதென்றும் வீதிகள் புனரமைப்பு தொடர்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரகளைக் கொண்டு உடனடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு விரைவாக நடவடிக்கைகள் எடுக்கப்படுமென்றும் தீர்மானிக்கப்பட்டன.
இப்பகுதியில் மக்கள் முழுமையாக மீளக்குடியமர்ந்தவுடன் மின்சார வசதிகளை வழங்குவதற்கும் விவசாய மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களைப் பதிவு செய்ததன் பின்னர் அவற்றினூடாக விவசாய மற்றும் கடற்றொழில் உபகரணங்களை வழங்குவதென்றும் இவற்றுக்கான பதிவுகளை இம்மாதம் 29ஆம் திகதி அப்பகுதியில் வைத்தே மேற்கொள்வதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதேவேளை, கீரிமலை – சேத்தாங்குளம், வடக்கு கரையோரப் பகுதிகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக நேற்று முதல் மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டதுடன் இம்மக்கள் கடற்றொழிலை மேற்கொள்ளும் முகமாக சேத்தாங்குளம் இறங்குதுறையையும் பாதுகாப்புத்தரப்பினருடன் கலந்துரையாடி அமைச்சர் விடுவித்துக் கொடுத்தார்.
.jpg)
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025