Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 28 , மு.ப. 09:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
வடபகுதியில் மீண்டும் இரு நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக, மரக்கறிப் பயிர்ச்செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால், யாழ். குடாநாட்டுச் சந்தைகளில் மரக்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.
அத்துடன், மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, வன்னியில் பெய்து வரும் மழையக்ல் மறுபடியும் வெள்ள அபாயம் தோன்றியுள்ளதுடன், குளங்களும் திறந்து விடப்பட்டுள்ளன. தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் தமது வீடுகளிலிருந்து வெளியேறி பாடசாலைகளிலும் பொதுஇடங்களிலும் தங்கியுள்ளனர்.
பரந்தன், ஆனைவிழுந்தான், மருதநகர், தருமபுரம், உமையாள்புரம், பொன்னகர், மலையாளபுரம் போன்ற இடங்களிலுள்ள மக்களே கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளனர்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025