2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வட, கிழக்கு பகுதியில் புதிய சிறுவர் இல்ல நிர்மாணம் கைவிடப்பட்டுள்ளது

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 28 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கு மற்றும் கிழக்கில் சிறுவர் இல்லங்களைப் புதிதாக நிர்மாணித்தல் தற்காலிகமாகக் கைவிடப்பட்டுள்ளது.

தன்னார்வ நிறுவனங்கள் இப்பகுதிகளில் அளவுக்கதிகமாகச் சிறுவர் இல்லங்களை நிர்மாணித்தமையே இதற்குக் காரணமென நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் ஆணையாளர் சரத் அபேகுணவர்தன குறிப்பிட்டார்.

அத்துடன் இதுவரை பதிவு செய்யப்படாதுள்ள சிறுவர் இல்லங்களைப் பதிவு செய்யும் நடவடிக்கைகளும் தற்போது மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார்.

சிறுவர்களை இல்லங்களில் சேர்ப்பதைக் குறைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சிறுவர் இல்லங்களை நிர்மாணிக்க ஆர்வமுள்ள தன்னார்வ அமைப்புகளிடம் வலியுறுத்துவதாகவும் ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X