Super User / 2010 டிசெம்பர் 29 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ், கவிசுகி)
யாழ்ப்பாணம் ஈச்சமோட்டைப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று யாழ். பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
மணியந்தோட்டத்தை சொந்த இடமாகக் கொண்ட 42 வயதான ராசையா சந்திரசிறி என இவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ஈச்சந்தோட்டத்தில் பாழடைந்த வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக பொலிசாருக்குத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விஜயம் மேற்கொண்ட யாழ்ப்பாணப் பொலிஸார் , சடலத்தை யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
எனினும் இவரது மரணம் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மரணம் தொடர்பாக யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
3 hours ago
9 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
22 Dec 2025