2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ்.சென்ற பெண்ணிடம் கொள்ளையிடப்பட்ட நகை மதவாச்சி பொலிஸாரினால் மீட்பு

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ்ஸில் பெண்ணொருவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட 20 பவுன் தங்க நகை நேற்று புதன்கிழமை மதவாச்சி பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

யாழ் கொழும்பு பஸ் வண்டி ஒன்று நேற்றிரவு உணவு இடைவேளைக்காக மதவாச்சியில் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்போது அதில் பயணித்த பெண்ணிடம் இருந்து தங்க நகை கொள்ளையிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து தங்க நகையை பொலிஸார் மீட்டுள்ளதாகவும் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மதவாச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கிஹான் அமரசூரிய தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X