2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வட மாகாணத்தில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்பு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

வடக்கின் உணவு பாதுகாப்பு நிலைமைகளில் அடுத்த நான்கு மாதங்கள் சிக்கலானதாக அமையும் என உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு ஊடகம் ஒன்று உலக உணவுத்திட்டத்திடம் இலங்கையின் வடக்கு நிலைமைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் வட மாகாணத்தில் உணவுப் பாதுகாப்பு நிலைமைகள் சிக்கலுக்கு உரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் பெரும்போக நெல் விளைச்சல் கிடைக்கும் என்பதால், இந்த நிலைமை மாற்றமடையும் என உலக உணவுத்திட்டம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், கடந்த மார்ச் மாதம் 2010ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது வட மாகாணத்தின் உணவு பாதுகாப்பு நிலைமையில் முன்னேற்றம் அவதானிக்கப்படுவதாக, உலக உணவுத்திட்டத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X