2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். குடாநாட்டில் மழையை அடுத்து டெங்கு நோய் பரவும் அபாயம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டில் இம்மாதம் மூவர் டெங்கு நோயால் மரணமானதாக யாழ். பிராந்திய சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் டெங்கு நோயினால் மரணித்தவர்களின் தொகை இதனுடன் 28 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பெய்துவரும் மழையை அடுத்து, டெங்கு நோய் பாதிப்பு அதிகரிக்கலாம் எனவும், பொதுமக்கள் இந்நோய் குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறும் சுகாதாரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை யாழ். குடாநாட்டின் சில பகுதிகளில் பொதுமக்களுக்கு வைரஸ் காய்ச்சலுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X