A.P.Mathan / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சின் நிதியுதவியுடன் யாழ். மாவட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரு ஐஸ் உற்பத்தி தொழிற்சாலைகள் தமது பரீட்சார்த்த உற்பத்தியை ஆரம்பித்துள்ளன.
இத்தொழிற்சாலைகளில் ஒன்று யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்திடமும் மற்றையது வடமராட்சி கடற்றொழிலாளர் சங்க சமாசத்திடமும் ஒப்படைக்கப்படவுள்ளன.
இத்தொழிற்சாலைகள் இரண்டும் முப்பது மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளன. புதிய ஐஸ் தொழிற்சாலைகள் உற்பத்தியை முழுமையாக ஆரம்பிக்கும்போது யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் தென்னிலங்கையில் இருந்து ஐஸ் கட்டிகளை எடுத்து வருவது தவிர்க்கப்படுமென யாழ். மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வள உதவிப் பணிப்பாளர் கே.தர்மலிங்கம் தெரிவித்தார்.
இத்தொழிற்சாலைகள் நிர்மாணத்துறைக்கான நிதியினை முன்னாள் கடற்றொழில் மற்றும் நீரியல்வள அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா ஒதுக்கியிருந்தார். இத்தொழிற்சாலைகள் யாழ்ப்பாணம் நாலாம் குறுக்குத் தெருவிலும் மற்றையது பருத்தித்துறை இன்பருட்டியிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்க சமாசமும் வேறு இரு தனியார் நிறுவனங்களும் சிறிய அளவிலேயே ஐஸ் உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago