2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு கல்வி சேவை நியமனம்

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

முன்பள்ளி ஆசிரியர்களாகக் கடமையாற்றும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் கல்விச் சேவையினுள் உள்வாங்கப்பட்டு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளனர் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

வலிமாமம் மேற்கு முன்பள்ளி ஆசியர்களின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மிக நீண்டகாலமாக குறைந்த வேதனத்தில் சிறார்களுக்கான தொடக்கக் கல்வியைப் போதித்து வரும் முன்பள்ளி ஆசிரியர்களின் பணி பாராட்டப்படவேண்டியது.

சேவையையே நோக்கமாகக் கொண்டு இந்தப் பணியைச் செய்து வரும் முன்பள்ளி ஆசியரியர்கள் வடமாகாண சபையின் கல்வி கலாசார பண்பாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர். இவர்கள் தகுதி காண் அடிப்படையில் நிரந்தர நியமனத்தைப் பெறுவர். இது மிக மகிழ்ச்சியான ஒரு செய்தியாகும்.

முன்பள்ளிகள்தான் வளர் பருவப்பிள்ளைகளின் தொடக்கப் புள்ளியாகும். இந்த முன்பள்ளிக் கற்கையை திறம்பட நிகழ்த்த வேண்டியது உரிய ஆசியர்களின் பொறுப்பாகும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வி்ல் கலந்து கொண்டு உரையாற்றிய வலிமேற்கு உடற்கல்விப் பணி்ப்பாளர் திரு.நடராஜா இந்த ஆசிரியர்களின் மாகாண சபையினுள் உள்ளவாங்கப்பட்டு நிரந்தர நியமனத்தைப் பெறுவதற்காகப் பாடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாருக்கும் வடமாகாண ஆளுனர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறிக்கும் நன்றி தெரிவித்தார்.

மேலும் இந்த நிகழ்வில் வலிமேற்கு முன்பள்ளிகளின் உதவிக் கல்விப் பணிப்பாளர் குகனேயன்இ முன்பள்ளிகளின் இணைப்பாளர் லில்லிராணிஇ  விசேட கல்வி வளவாளர் திரு. அருமைநாதன்இ முன்பள்ளிகளின் ஆசிரிய சங்கத்தலைவர் சத்தியகுமாரி உட்படப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X