2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

நெடுந்தீவு முகிலனின் நூல் வெளியீட்டு விழா

Menaka Mookandi   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

நெடுந்தீவு முகிலனின் கடவுளின் சயனத்தை கலைக்கும் மணியோசை 7ஆவது நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மன்னார் நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

திருக்கேதீஸ்வர ஆலய செயலாளர் புலவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட புனர்வாழ்வு புனரமைப்புச் செயலக திட்டப்பணிப்பாளர் அந்தோனிப்பிள்ளை பத்திநாதன் பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.

மன்னார் இந்து ஆலயங்களின் பிரதமகுரு கலாநிதி சிவஸ்ரீசபாமனோகர குருக்கள் ஆசியுரையையும் வாழ்த்துரையை மன்னார் இந்து ஆலயங்களின் ஒன்றியத்தலைவர் கலாநிதி மு.கதிர்காமநாதன் ஆகியோர் வழங்கவுள்ளனர். நூல் மதிப்பீட்டுரையை மன்னார் தமிழ்ச்சங்க தலைவர் தமிழ் நேசன் அடிகளார் வழங்கவுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X