2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வானொலியை திருடிய நபருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

முச்சக்கரவண்டியிலிருந்த வானொலியொன்றை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரை இரு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.


முச்சக்கரவண்டியிலிருந்த  வானொலியொன்றை திருடிய குற்றச்சாட்டில் சந்தேக நபரான ரூபன் என்பவரை தெல்லிப்பளைப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.


குறிப்பி;ட்ட சந்தேக நபரும் மற்றும் ஏற்கெனவே தோட்டத்தில் மின்சாரத் தாக்குதலுக்கு இலக்காகி  மரணமான பாக்கியராஜ என்பவரும்  இணைந்து கட்டுவன் பகுதியிலுள்ள வீட்டில் நிறுத்திவைக்கப்பட்ட முச்சக்கரவண்டியில் பொருத்தப்பட்ட சுமார் எட்டாயிரம் ரூபாய் பெறுமதியான வானொலியைத் திருடியிருந்தனர்.


விசாரணைகளை மேற்கொண்ட தெல்லிப்பளை பொலிஸார், சந்தேக நபரிடம் நடத்திய விசாரணையையடுத்து  மரணமான பாக்கிராஜாவின் வீட்டிலிருந்து வானொலியை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X