Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 11:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
கட்டுவன் மேற்கில் தோட்டத்தை அழிக்கும் பன்றிகளுக்காக அமைக்கப்பட்ட மின்சாரவேலியில் அகப்பட்டு திருட்டுக்கு சென்றவர் பலியான சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரை இரு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி கே.கஜநிதிபாலன் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் அதிகாலை கட்டுவன் மேற்கு முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையிலுள்ள தோட்டத்திற்கு அத்துமீறிச் சென்ற வேளையில், குறித்த நபர் மின்சார வேலியில் அகப்பட்டு பலியானார்.
கட்டுவன் மேற்கைச் சேர்ந்த சந்திரன் பாக்கியராஜா என்பவரே இவ்வாறு மின்சாரவேலியில் அகப்பட்டு பலியானவர் ஆவார்.
மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்திய தெல்லிப்பளைப் பொலிஸார், மின்சாரவேலி அமைக்கப்பட்ட காணி உரிமையாளர் சிவராசா சிவதாசன் என்பவரை கைதுசெய்து மல்லாகம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போதே, காணி உரிமையாளரை இரு வார காலம் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago