2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் கணவனை காணவில்லையென மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 31 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

நேற்று காலை உரும்பிராய் பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தனது கணவன் கடத்தப்பட்டுள்ளதாக, இன்று யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் மனைவி முறைப்பாடு செய்துள்ளார்.

உரும்பிராய் மேற்கு, வைத்தீஸ்வரா வீதியை சேர்ந்த சண்முகநாதன் விக்னேஷ்வரன் (வயது 30) என்னும் நபர் நேற்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்தவேளை பின்தொடர்ந்த வாகனமொன்றில் வந்தவர்களால் கடத்தப்பட்டுள்ளார். இச்சம்பவத்தினை நேரில் கண்ட வயோதிபர் உடனடியாக அருகிலுள்ள இராணுவத்தினரிடம் முறையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டதுடன் சைக்கிளையும் செருப்பு ஒன்றினையும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச்சென்றனர்.

இந்நிலையிலேயே இன்று காலை யாழ். மனித உரிமை ஆணைக்குழுவினரிடம் குறித்த நபரின் மனைவி முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளார். பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X