2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வட மாகாணத்தில் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள்: ஆளுநர் சந்திரசிறி

Super User   / 2011 ஜனவரி 02 , பி.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வட மாகாணத்தில் பல பாரிய அபிவிருத்தி திட்டங்கள் இந்த வருடத்தில் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்தார்

குறிப்பாக உட்கட்டமைப்பு, விவசாயம், கல்வி மற்றும் வீடமைப்பு தொடர்பான அபிவிருத்திப் பணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
கடந்த 2009ஆம் ஆண்டு அமுலுக்கு வந்த வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பல அபிவிருத்தித் திட்டங்கள் சிறந்த முறையில் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
 
A32 பெருந்தெரு முற்றாக செப்பனிடப்பட்டுள்ளதுடன், பூனகிரி பாலத்தின் நிர்மாணப்பணிகளும் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இந்த பாலம் விரைவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
 
இது தவிர, பெரும்போகத்திற்காக 30 ஆயிரத்து 366 ஹெக்டயர் நிலத்தில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதன் அறுவடை எதிர்வரும் பெப்பிரவரி அல்லது மார்ச் மாதங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X