Suganthini Ratnam / 2011 ஜனவரி 03 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
நாடளாவிய ரீதியில் சட்டரீதியாக நடைமுறையிலுள்ள மீன்பிடி முறைகளுக்கு அமைவாக யாழ். மீனவர்களும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டுமென்றும் அவற்றை மீறிச் செயற்படுபவர்கள் மீன்பிடித்தொழில் தண்டனைச் சட்டத்திற்கமைய தண்டிக்கப்படுவார்களென்றும் கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். உதவிப் பணிப்பாளர் தர்மலிங்கம் தெரிவித்துள்ளார்
மீன் வளத்தையும் கடல் வளத்தையும் பாதுகாக்கத்தக்க வகையிலான மீன்பிடி முறைகள் நாடளாவிய ரீதியில் மீனவர்களினால் கைக்கொள்ளப்பட வேண்டுமென்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், யுத்தத்தை முன்னிட்டு; பாதுகாப்புக் காரணங்களுக்காக கடல் வலயத் தடைச்சட்டம் அமுலிலிருந்ததால் வடபகுதியில் மீனவர்கள் இரவு நேரத்தில் மீன்பிடிப்பதற்குச் செல்ல முடியாமலிருந்தது. பகலில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே அவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள். அத்துடன் மீனவர்களிடம் மீன்பிடி தொழிலுக்குத் தேவையான வலைகள், உபகரணங்கள் என்பன இல்லாமல் இருந்ததனால் மீன்பிடிப்பது தொடர்பான சட்ட விதிகளில் நெகிழ்ச்சிப்போக்குக் கடைப்பிடிக்கப்பட்டிருந்தது.
டைனமைட் பயன்படுத்துவது, மீன்களை மயக்கமடையச் செய்யும் மருந்துகளைப் பயன்படுத்தி மீன்பிடிப்பது, தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துவது, அழிந்து செல்கின்ற மீன் இனங்களாகிய டொல்பின், கடலட்டை போன்ற கடல்வாழ் உயிரினங்களை விற்பனைக்காகவும் நுகர்வுக்காகவும் பிடிப்பது, முறையாகப் பதிவு செய்யப்படாத கடற் கலன்கள் மீன்பிடிப்பதற்காகப் பயன்படுத்துவது என்பன தடை செய்யப்பட்டுள்ளதாக யாழ்.மீன்பிடி நீர்வழங்கல் திணைக்களப் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago