2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். குற்றச்செயல் தொடர்பில் உயர்மட்ட மாநாட்டுக்கு அரச அதிபர் அழைப்பு

Super User   / 2011 ஜனவரி 03 , பி.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வருகின்ற ஆட்கடத்தல்கள் படுகொலைகள் மற்றும் கொள்ளைகளை தடுத்து நிறுத்துவது தொடர்பாக உயர்மட்ட மாநாடு ஒன்றுக்கு முப்படை அதிகாரிகளையும் மற்றும் சமூக ஆவலர்களையும் யாழ். அரச அதிபர் இமல்டா சுகுமார்  அழைத்துள்ளார்.

இன்று  இடம்பெற்ற ஊடகவிலாளர் மாநாட்டின் போதே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
இதன் பிரகாரம் யாழ் மாவட்ட இராணுவத் தரப்பு மற்றும் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் தரப்பு உள்ளிட்ட பல தரப்பி;னரும் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

திடீரென குடாநாட்டின் நகரப் பகுதிக்கு நேற்று சென்று இரவிரவாகப் பார்வையிட்டதாகவும் பல இடங்களில் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை எனவும் பல இடங்களில் குற்றச்செயல்கள் மோசமாக அதிகரித்துக் காணப்படுவதாகவும் அரச கட்சிகளின் ஒத்துழைப்பினை சில நபர்கள் துஷ்பிரயோகம் செய்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். குறிப்பாக பெண்கள் வீடுகளில் நடமாட முடியாத நிலை இரவு நேரத்தில் முற்றாக ஏற்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலை தொடர்ந்து நீடிப்பதனை அனுமதிக்க முடியாது. கைதுகள்இ காணாமல் போதல்கள் படுகொலைகள் என்பன தொடர்பில் குடாநாட்டு மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இந்த நேரத்தில் அபிவிருத்தி தொடர்பாக பேசுவது பொருத்தமானது அல்ல. உடனடியாக இக்குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார் அவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X