2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழ். வன்முறைகள் குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்புக; அமைச்சர் டக்ளஸுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தல்

Super User   / 2011 ஜனவரி 03 , பி.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கெலும் பண்டார)

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன்முறை சம்பவங்கள் குறித்து இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில்  கேள்வி எழுப்புமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.


பாதுகாப்புத் தரப்பினர் யாரையும் கடத்த வேண்டிய நிலையில் இல்லை என ஜனாதிபதி கூறியுள்ளார். அதனால் மேற்படி விடயம் குறித்து சம்பந்தப்பட்ட துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் பதிலை கோருமாறும் ஜனாதிபதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் நேற்று கூறியுள்ளார்.


இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் யாழ் வன்முறைச் சம்பவங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் பிரஸ்தாபிப்பதற்கு திட்டமிட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X