Suganthini Ratnam / 2011 ஜனவரி 05 , மு.ப. 03:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
தென்மராட்சி, எழுதுமட்டுவாள் ஆலயமொன்றிலிருந்து காணாமல்ப்போன 4 சிலைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
எழுதுமட்டுவாள் விழுவை அம்மன் கோவிலிலிருந்த 4 சிலைகள் காணாமல்ப்போயிருந்தமை தொடர்பில் கொடிகாமம் பொலிஸில் ஆலய நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து கொடிகாமம் பொலிஸார் விசாரணை நடத்தியபோது, யாழ்ப்பாணத்தில் சிலைகள் விற்பனை செய்யும் கடையொன்றிலிருந்து குறித்த சிலைகள் மீட்டனர். அத்துடன், கடை உரிமையாளரைக் கைதுசெய்து சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.
குறித்த வழக்கை விசாரணை செய்த சாவகச்சேரி நீதிமன்ற நீதவான், கடை உரிமையாளருக்கு 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 2 சரீரப்பிணையில் செல்வதற்கு அனுமதித்ததுடன், ஆலய நிர்வாகத்தினரை 1 இலட்சம் ரூபாய் பிணை செலுத்தி சிலைகளை கொண்டுசெல்ல அனுமதியளித்தார்.
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago
9 hours ago