Kogilavani / 2011 ஜனவரி 05 , பி.ப. 05:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சுபுன்டயஸ்)
யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலைவரம் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறிய கருத்துக்களை இராணுவம் மறுத்துள்ளது. 'இராணுவம் இந்த குற்றச்சாட்டுக்களை பூரணமாக மறுக்கிறது' என யாழ்ப்பாண பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க டெய்லிமிரருக்கு தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் பயப்பிராந்தியுடன் வாழும் மனநிலை ஒன்று மக்களிடம் தோன்றியிருப்பதாகவும் குற்றச் செயல்கள் அதிகரித்திருப்பதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கூறியமைக் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் சட்டம் ஒழுங்கை பேணுவதில் இராணுவம் பொலிஸாருக்கு உதவி வருகின்றது. இராணுவம் இரவு நேரத்தில் ரோந்துக்களை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. இங்கு இடம்பெறும் களவு, கொலை, மற்றும் வேறு குற்றச்செயல்கள் தனிப்பட்ட சச்சரவுகளின் அடிப்படையில் இடம்பெறுபவை என மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்க கூறினார்.
8 minute ago
5 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
5 hours ago
22 Dec 2025