Suganthini Ratnam / 2011 ஜனவரி 06 , மு.ப. 03:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
மீசாலைக்கும் புத்தூருக்கும் இடையேயான ஏ - 9 வீதியில் நேற்;று புதன்கிழமை காலை இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் இன்னொரு மோட்டார் சைக்கிளுடன் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இரு பிள்ளைகளின் தந்தையான எஸ்.சண்முகநாதன் (வயது 55) என்பவரே உயிரிழந்தவர் ஆவர். இவர் சரசாலை கோப்சிற்றியில் பணியாற்றி வருபவர் ஆவர்.
காயமடைந்த இவர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்தார்.
இவ் விபத்துச் ;சம்பவம் தொடர்பாக சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
34 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
7 hours ago