2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். தேசிய தைப்பொங்கல் விழாவில் பிரதம விருந்தினராக ஜனாதிபதி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 06 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள தேசிய தைப்பொங்கல் விழாவிற்கு பிரதம விருந்தினராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொள்வாரென்று எதிர்பார்க்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் இம்முறை தைப்பொங்கல் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.  

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில்  தேசிய பொங்கல் விழா கொண்டாடப்படவுள்ளதுடன்,  அன்றையதினம் தமிழ் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் கலை, கலாசார நிகழ்வுகளும் மற்றும் தென்னிந்திய முன்னணி இசை கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளதாகவும் வடமாகாண ஆளுநர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X