2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

தாவடிப் பிள்ளையார் கோவிலில் திருட்டு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 06 , மு.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

தாவடிப் பிள்ளையார் கோவிலின்  கூரையை பிய்த்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள் ஆலயத்திலிருந்த பெறுமதியான பொருட்களையும் உண்டியலிருந்த பணத்தையும்  திருடிச்சென்றுள்ளனர்.


இந்த திருட்டுச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.


இந்நிலையில் பூஜை நிகழ்த்துவதற்காக இன்று வியாழக்கிழமை அதிகாலை ஆலயத்திற்கு சென்ற ஆலயக் குருக்கள், பொருட்கள் திருட்டுப்போனதைக் கண்டு அப்பகுதி கிராம அலுவலர்க்கும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளார்.
இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X