2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

யாழில் போலிப் பற்றுச்சீட்டு விற்றவரை பொதுமக்கள் நையப்புடைந்தனர்

A.P.Mathan   / 2011 ஜனவரி 06 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் மாட்டீன் வீதிப் பகுதியில் போலிப் பற்றுச்சீட்டை விற்பனை செய்து பணம் அறவிட்ட நபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து நையப்புடைந்து இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் இராணுவத்தினரால் யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை பிற்பகல் 5.30 மணியளவில் மாட்டீன் வீதி மற்றும் கன்னியர் மடப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் போலியபன பற்றுச்சீட்டுக்களை வைத்திருந்து விற்பனை செய்து வந்தவரை அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் மற்றும் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு யாழ்ப்பாணப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணையின் மூலம் குறித்த நபர் வவுனியா தேக்காவத்தையைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X