A.P.Mathan / 2011 ஜனவரி 06 , பி.ப. 07:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாண மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு உதவ சென்னை பல்கலைக்கழகம் தயாராக உள்ளது என்று அப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.
''எதிர்காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகமானது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ளவும் விரும்புகின்றது. இதற்கான ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும். யுத்தச் சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு ஒத்துழைப்பதற்கு நாம் எப்போதும் தயாராகவே உள்ளோம்'' என்றார் சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் திருவாசகம்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஊடகவளங்கள் மற்றும் பயிற்சி மையத்தின் 36 மாணவர்கள் புத்தாக்கப் பயிற்சிக்காக சென்னைக்குச் சென்றுள்ளனர். விசேடமாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ள இரண்டு வாரகால இந்தப் பயிற்சியை நேற்றுக் காலை பேராசிரியர் திருவாசகம் ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்...
''போரினால் பொருளாதாரமும் கல்வி, பண்பாடும் சிதைக்கப்பட்டதான சூழலில் வாழ்கின்ற தமிழர்களுக்கு சிறந்த கல்வியை வழங்குவதன் மூலம் இழந்தவற்றை மீளப் பெறமுடியும். சிதைந்துபோன கல்வியையும் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். தமிழ் மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்கு உதவ நாம் தயாராக உள்ளோம். மனிதன் தலை நிமிர்ந்து நிற்பதற்கு கல்வியே சிறந்த ஆயுதமாகும்'' என்றார் துணைவேந்தர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago