2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

அரியாலை கிழக்குக் கடலில் மீன் பிடிக்க அனுமதி

A.P.Mathan   / 2011 ஜனவரி 06 , பி.ப. 07:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

அரியாலை கிழக்குக் கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடப் படையினர் மட்டுப்படுத்தப்பட்ட முறையில் அனுமதி வழங்கியுள்ளனர். எனினும் பகலில் மட்டுமே கடற்தொழிலில் ஈடுபட முடியுமென படையினர் கட்டளை பிறப்பித்துள்ளனர்.

அரியாலை கிழக்குப் பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பின்னர்- முதல் முறையாக கடற்றொழிலில் ஈடுபட அனுமதி வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறித்த கடற் பிரதேசத்தில் கடற்றொழிலில் ஈடுபடுவது குறித்து அரியாலை கிழக்கு மீனவர்களுக்கும் மற்றும் படையினருக்கும் இடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X