2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

'சலுகைகளை விட உரிமைகளுக்கே வட மாகாண தமிழர்கள் முன்னுரிமை'

Super User   / 2011 ஜனவரி 07 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

வட மாகாணத்தில் வாழும் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் சலுகைகளை விட உரிமைகளுக்கே முன்னுரிமையளிப்பதாக யாழ் மாநகர முன்னாள் பிரதி மேயர் எம்.பஷீர் தெரிவித்தார்.

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் புத்தளம் மாவட்ட அமர்வில் சாட்சியமளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து சாட்சியமளித்த அவர்,

வட மாகாணத்தில் வாழும் மற்றும் வாழவுள்ள மக்களின் புரிந்துணர்வு செயற்பாடுகள் முதன்மைப்படுத்தப்பட வேண்டும்.

தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது.

அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலைக்  கூட்டணி என்பனவற்றையும் உள்ளீர்த்து சமாதான பேச்சுக்களை முன்னெடுக்க வேண்டிய அவசியத்ததையும் அங்கு முன்வைத்தார்.

முஸ்லிம்களின் இழக்கப்பட்ட சொத்துக்களுக்கான நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும். அத்துடன் வட மாகாண முஸ்லிம்களின் தேவை குறித்து ஆராய தனியான ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்க வேண்டும்.

வட மாகாணத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள முஸ்லிம்களின் காணி பிரச்சினைகள், வீடமைப்பு வசதிகள் குறித்து தன்னால்  முன்வைக்கப்பட்டுள்ள சிபாரிசுகளை ஆணைக்குழு ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை அரசாங்கத்துக்கு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X