2025 டிசெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வரகாபொல சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜே.வி.பி. கோரிக்கை

Super User   / 2011 ஜனவரி 07 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கடந்த மாதம் வரகாபொலவில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்துமாறு ஜே.வி.பி. கோரியுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் 7 சந்தேக நபர்களும் பொலிஸாருடனான மோதலின் போது கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

எனினும் கிராமவாசிகள் தாம் கைது செய்த சந்தேக நபர்கள் இருவரை பொலிஸாரிடம் கையளிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோவொன்று வெளியானதையடுத்து இது தொடர்பாக விசாரணை நடத்துமாறு  ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது.


'சந்தேக நபர்கள் மோதல்களின்போது பலியானதாக பொலிஸார் கூறினாலும், சந்தேக நபர்கள் இருவரை கிராமவாசிகள் பொலிஸாரிடம் கையளிப்பதை அந்த வீடியோ காட்டுகிறது' ஏன ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் , டெய்லி மிரர் இணையத்தளத்திடம்  தெரிவித்தார்.


வரகாபொலயில் நகை அடகுக் கடையொன்றில் இடம்பெற்ற கொள்ளை தொடர்பாக சந்தேக நபர்களை பொலிஸார் துரத்திவந்தபோது அம்பேபுஸ்ஸவில் இடம்பெற்ற மோதலில் பொலிஸார் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.


அதன்பின் இராணுவ உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இரு நாட்களில் சந்தேக நபர்கள் அனைவரும் பொலிஸாருடனான மோதல்களின்போது கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இதேவேளை பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜயகொடியிடம் இதுதொடர்பாக கேட்டபோது, இச்சம்பவங்கள் குறித்து நீதவான் விசாரணைகள் நடைபெற்று, நீதிமன்ற தீர்மானமொன்றும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X