2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ். கோட்டை அகழ்வாராய்ச்சியில் தொல்லியல் சின்னங்கள் மீட்பு

A.P.Mathan   / 2011 ஜனவரி 08 , பி.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணக் கோட்டையின் அகழ்வாராய்ச்சியின் போது ஒல்லாந்தர் காலத்துக்கு முற்பட்ட தொல்லியற் சின்னங்கள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டுவருவதாக யாழ். பல்கலைக்கழக தொல்லியற்துறைத் தலைவர்- பேராசிரியர் புஸ்பரட்ணம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் :

போர்த்துக்கேயர், சேர, சோழர் காலத் தொல்பொருட்களும்- யாழ்ப்பாணத் தமிழ் மன்னர் காலத் தொல்பொருட்களும், பாண்டியர், பொலநறுவை மன்னர் கால நாணயங்களும் மீட்கப்பட்டுள்ளன. இங்கு கிடைத்த நாணங்கள் கோட்டை வாணிபத் தலமாக இருந்ததை நிரூபிக்கின்றன. இப்போது கோட்டை வாசல் பகுதியில் அகழ்வாராய்ச்சி பணிகள் இடம்பெற்றுவருகின்றன.

புனரமைப்புப் பணியின்போது புராதனகால சுக்கா, நாணங்கள், மட்பாண்ட ஓடுகள் தொடர்ச்சியாக மீட்கப்பட்டு வருகின்றன.

புராதன பீரங்கித்தளம் மீள்கட்டுமானப் பணிகளில் தொல்லியற் பட்டதாரிகளும் 125 பணியாளர்களும் கடமையாற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Sunday, 09 January 2011 01:26 PM

    கவனம், தொல்பொருள் என்று ஏதும் வெளிவந்து, கோட்டையின் தலை எழுத்து மாறிவிடாமல் ...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X