2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சங்குப்பிட்டி பால நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தில்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 10 , மு.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டையும் பூநகரிப் பிரதேசத்தையும் இணைக்கும் சங்குப்பிட்டி பாலத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லக்கூடிய மிகவும் குறுகிய வழி ஏ - 32 வீதியாகும். இந்த வீதி சிலாபம,; புத்தளம், மன்னார் ஊடாக பூநகரி வரையிலும் அங்கிருந்து கிளாலி, களப்பு ஊடாக யாழ். குடாநாடு வரையிலும் அமைந்துள்ளது. வடக்கின் வசந்தம் துரித அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த வீதியின் புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

மன்னாரிலிருந்து பூநகரி வரையிலான வீதி கட்டம் கட்டமாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன், பூநகரியிலிருந்து யாழ். குடாநாடு வரையிலான 3.5 கிலோமீற்றர் நீளமுடைய பாலத்தின் நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X