2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சுழிபுரத்தில் தனித்திருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து நகைகள் கொள்ளை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(தாஸ்)

யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் தனித்திருந்த பெண்ணின் கழுத்தை நெரித்து  நகைகளை கொள்ளையிட்ட சம்பவமொன்று  நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

சுழிபுரம் பத்திரகாளி அம்மன் கோவில் பகுதியில் இரு மோட்டார் சைக்கிளில் சென்ற 4 பேர், வீட்டில் தனித்திருந்த  40 வயதுடைய பெண்ணின் வாய்க்குள் துணியை அடைந்து கழுத்தை நெரித்தவாறு நகைகளை எடுத்துத் தருமாறு கூறி அவற்றைக் கொள்ளையடித்துள்ளனர்.  அத்துடன், குறித்த பெண்ணின் மகளொருவரை கயிற்றால் கட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

வீட்டு உரிமையாளர் வெளியில் சென்றிருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X