Suganthini Ratnam / 2011 ஜனவரி 11 , மு.ப. 06:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் வரும் தேசிய வடிவமைப்பு நிலையத்தின் வருடாந்த விருது வழங்கும் விழா இன்று செவ்வாய்க்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
யாழ். மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்ற இவ்விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம அதிதியாக கலந்துகொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார்.
மஹிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்; ஏற்பாட்டில் யாழ். குடாநாட்டில் வழக்கிலுள்ள 31 கிராமிய கைத்தொழில்கள் இனங்காணப்பட்டு கைவினைத்திறன் மற்றும் சிறுகைத்தொழில் கலைஞர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இதற்கென தென்பகுதியிலிருந்து விசேட தேர்ச்சி பெற்ற போதனாசிரியர்கள் வரவழைக்கப்பட்டு சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டன. யாழ்ப்பாணம், சங்கானை, சாவகச்சேரி, கரவெட்டி, தெல்லிப்பளை ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட பயிற்சி நிலையங்களில் மேற்படி பயிற்சிகள் வழங்கப்பட்டன. இப்பயிற்சிநெறிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்றவர்கள் இன்றையதினம் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், தேசிய வடிவமைப்பு நிலையத்தினால் சிறப்பு வடிவமைப்புக்களுக்காக வருடாந்தம் வழங்கப்படும் விருதுகளும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கி வைக்கப்பட்டன. தென்பகுதியிலிருந்து இவ்விருதுகளைப் பெறுவதற்காக வருகை தந்திருந்த சிறந்த வடிவமைப்புக்களுக்கான விருதுகளைப் பெற்ற இளைஞர், யுவதிகளது உற்பத்திப் பொருட்கள் யாழ். மத்திய கல்லூரியில் இடம்பெறும் காலத்திற்கேற்ற உற்பத்திகள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் யாழ். அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், தேசிய வடிவமைப்பு நிலைய தலைவர் மார்ஷல் ஜனதா, தேசிய வடிவமைப்பு நிலைய பணிப்பாளர் டி.பி.விஜேகோன, யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் என்.சண்முகலிங்கன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அத்துடன் இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
.jpg)
.jpg)
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025