Kogilavani / 2011 ஜனவரி 13 , மு.ப. 06:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் ஏற்பாட்டில தைப்பொங்கல் கலாசார விழா எதிர்வரும் 15 ஆம் திகதி சனிகிழமை காலை யாழ் மத்திய கல்லூரியில் நடைபெறவுள்ளது.
மனிதவள அபிவிருத்தி சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் புனரமைப்பு மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்புப்பு அமைச்சர் சந்திரஸ்ரீ கஜதீர, பாரம்பரிய கைத்தொழில்கள் சிறுகைத்தொழில்கள் அபிவிருத்தி அமைச்சா டக்ளஸ் தேவானந்தா, கலாசார அமைச்சா டீ.பி.ஏக்கநாயக்க, வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரஸ்ரீ, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள், அரச உயர் அதிகாரிகள் ஆகியயோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
கைத்தொழில்கள் சிறு கைத்தொழிகள் அபிவிருத்தி அமைச்சு, கலாசார அமைச்சு, வட மாகாண சபை, யாழ் மாவட்ட செயலகம், இந்து சமய கலாசார திணைக்களம், தேசிய இளைஞர்கள் சேவைகள் மன்றம், யாழ். பல்கலைக்கழகம் கல்வித்திணைக்களம் ஆகியவற்றின் அனுசரனையோடு இவ் தைப்பொங்கல் கலாசார விழா நடைபெறுகின்றது.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago