Menaka Mookandi / 2011 ஜனவரி 13 , மு.ப. 10:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
யாழ் மாநகரம் சுத்தமாக பேணப்படும் அதேவேளை மக்களுக்கான சேவைகளும் பூரணமாக நிறைவு செய்யப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ் மாநகர சபை கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்ற நகரின் சுத்தம், சுகாதாரம் தொடர்பிலான கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், 'யாழ் மாநகர சபையின் சேவை போதாததாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் அவர்கள் மாநகர சபையானது வருமானத்தை பெருக்கிக் கொள்ளும் அதேவேளை மக்களுக்கான அதனது சேவைகளையும் விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பதுடன் நகரின் சுத்தம், சுகாதாரம் தொடர்பில் மாநகரசபையினது தேவைகளையும், பிரச்சினைகளையும் இனங்கண்டு அவற்றுக்கு உரிய வகையில் தீர்வு காண வேண்டும்.
மேற்பார்வையாளர்கள் அலுவலகக் கடமைகளுடன் நின்று விடாது, முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களையும் நேரில் சென்று பார்வையிட வேண்டியதும் முக்கியமானது. ஒவ்வொருவரும் தமக்கான பொறுப்புக்களை பொறுப்புணர்வுடனும், கடமையுணர்வுடனும் ஆற்ற வேண்டுமென்பதுடன், அடுத்துவரும் 10 நாட்களுக்குள் பாரிய மாற்றத்தைக் காணக் கூடிய வகையில் எல்லோரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
இருக்கின்ற வளங்களை வைத்துக் கொண்டு வேலைத்திட்டங்களை செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதுடன், மேற்பார்வையாளர்கள் புதிதாக நியமனம் செய்யும் பட்சத்தில் எல்லோரும் அவருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கும் பட்சத்திலேயே எதிர்காலத்தில் சிறப்பாக வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.
ஊழியர் முன்கூட்டி உரிய அதிகாரிகளிடம் அறிவித்து அனுமதி பெற்றுக்கொண்ட பின்னரே விடுமுறை எடுக்க வேண்டுமெனவும் பணியாளர் ஒருவர் விடுமுறை எடுக்கும் பட்சத்தில் மற்றொரு பணியாளர் பதில் கடமை செய்ய வேண்டுமெனவும் இந்நடைமுறை இன்றிலிருந்தே நடைமுறைக்கு வருவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் யாழ் மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, மாநகர ஆணையாளர் உள்ளிட்ட துறைசார்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
3 hours ago
8 hours ago
22 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
8 hours ago
22 Dec 2025