Suganthini Ratnam / 2011 ஜனவரி 18 , மு.ப. 10:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன் )
வல்லைவெளியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம், கந்தரோடையைச் சேர்ந்த (வயது 65) இராசா முருகையா என்பவரே இவ்வாறு நேற்று திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 2.30 மணியளவில் மோட்டார் சைக்கிளில் தனது மனைவியுடன் வல்லை வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வேளையில் தலைக்கவசம் காற்றுக்கு கழன்று பறந்ததாகவும் அதனை பிடிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் வீதியில் வீழ்ந்து விபத்திற்குள்ளானது.
குறித்த நபர் காயமடைந்த நிலையில் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்திருந்தார்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago