2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

சுழிபுரத்தில் யுவதியை துப்பாக்கி முனையில் மிரட்டி தங்க நகைகள் கொள்ளை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(தாஸ்)

வட்டுக்கோட்டை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சுழிபுரம் மேற்குப் பகுதியிலுள்ள வீடொன்றில் துப்பாக்கியுடன் உள்நுழைந்த ஆயுததாரி அங்கிருந்த வயோதிப மாதுவை கட்டிவைத்துவிட்டு அவருடன் கூட இருந்த இளம் யுவதியை துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டினுள் இருந்த அனைத்து நகைகளையும் சூறையாடிச் சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,

சுழிபுரம் மேற்கு விசுவத்தனை வீதி பண்ணாகத்திலுள்ள அரியகுட்டி தர்மலிங்கம் என்பவரது வீட்டிற்கு நேற்று  செவ்வாய்க்கிழமை நண்பகல் 2 மணியளவில் சைக்கிளில் வந்த குறித்த ஆயுததாரி இந்தத் துணிகரச் செயலைச் செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் வெளியில் சென்றிருந்தபோது அவரது மனைவியான அரியகுட்டி பூபவதி (வயது 70) என்பவரைத் துணியால் கட்டிவிட்டு அவருடன் துணைக்கு நின்ற பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி வீட்டின் அனைத்துப் பகுதிகளையும் சல்லடை போட்டு தேடி 50 பவுண் நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X