Suganthini Ratnam / 2011 ஜனவரி 19 , மு.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் நிறுவனமொன்றில் பல்வேறு பதவிகளுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றப்பட்ட இளைஞர், யுவதிகள் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து முறையிட்டனர்.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ். பணிமனைக்கு நேற்று செவ்வாய்க்கிழமை சென்ற இளைஞர், யுவதிகள் இந்த முறைப்பாட்டை முன்வைத்தனர்.
குறுகியகாலப் பயிற்சி மற்றும் ஆங்கிலமொழிப் போதனையின் பின்னர் தமக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுமென உத்தரவாதம் அளிக்கப்பட்டு தம்மிடமிருந்து பணம் பெறப்பட்டதாகவும் ஆனால் பயிற்சிகள், ஆங்கிலமொழிப் போதனைகள் ஒழுங்காக வழங்கப்படாததுடன் தாம் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தமக்கு நியாயம் பெற்றுத் தருமாறும் தாம் ஏமாற்றப்பட்ட போன்ற சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாதிருக்க அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரினர்.
இது தொடர்பில் யாழ். பொலிஸ் உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றதுடன் பாதிக்கப்பட்ட இளைஞர், யுவதிகளை பொலிஸில் முறைப்பாடு செய்யுமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். தான் நியாயம் பெற்றுத்தருவதாகவும் அவர் உறுதியளித்தார்.
பொருத்தமான வேலைவாய்ப்புக்களைப் பெற்றுத்தருமாறும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிய இவ் இளைஞர், யுவதிகளுக்கு பதிலளித்த அமைச்சர், சகலரும் அரசாங்க வேலைவாய்ப்பினை எதிர்பார்ப்பது சாத்தியமற்றதெனவும் தமது அமைச்சினூடாக விரைவிலேயே உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்யவிருப்பதால் அங்கு பெருமளவு வேலைவாய்ப்பு உருவாகுமெனவும் கூறினார். அத்துடன், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல், தனியார் துறையிலும் தற்சமயம் ஓய்வூதியத்திட்டம் அமுல்படுத்தப்படுவதால் தயக்கமின்றி தனியார் துறைகளிலும் சேவையாற்ற முன்வரவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
2 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago
9 hours ago