Suganthini Ratnam / 2011 ஜனவரி 20 , மு.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(தாஸ்)
நலிவடைந்திருக்கும் கைத்தொழில் துறையை மேம்படுத்துவதனூடாக வேலையற்ற பல்லாயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு புதிய தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டுமென்ற நோக்குடன் 'வியாபாரத்திற்கான உங்கள் திறவுகோல்' என்னும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இரண்டாவது தடவையாகவும் நடைபெறவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்த்துறை மன்றத் தலைவர் கே.பூரணச்சந்திரன் தெரிவித்தார்.
இக்கண்காட்சி 21ஆம் 22ஆம் 23ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண வர்த்தக கைத்தொழில் மன்றமும் வரையறுக்கப்பட்ட இலங்கைக் கண்காட்சி மற்றும் மாநாடுகள், சேவைகள் தனியார்
நிறுவனமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ள மாபெரும் இக்கண்காட்சியில் ஏறத்தாழ 250 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா, இந்தோனேசியா, மலேசியா மற்றும் இலங்கையின் தென்பகுதியைச் சேர்ந்த தேசிய மற்றும் பல்தேசிய கைத்தொழில்
நிறுவனங்களும் தமது உற்பத்திப் பொருட்கள், இயந்திர சாதனங்களைக் காட்சிப்படுத்துவதுடன் பூரணமான விளக்கத்தையும் அளிக்கவுள்ளது.
இக்கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்; இயந்திர சாதனங்களைக் கொள்வனவு செய்ய விரும்புபவர்கள் உடனையே கௌ;வனவு செய்ய முடியுமென்பதுடன், கண்காட்சியின் சிறப்பம்சங்களாக முன்னணித் தென்னிலங்கையின் இசைக் குழுமங்கள் வழங்கும் இன்னிசை கதம்ப நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
யாழ்ப்பாணம் சுப்பிரமணியம் பூங்காவிற்கு முன்பாகவுள்ள மாநகரசபை வளாகத்தில் இக்கண்காட்சி நடைபெறவுள்ளது. இதற்கென பல மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என்றார்.
.jpg)
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago