2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழின் அபிவிருத்தி பற்றிய செயலமர்வு

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 28 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். சிந்தனைக்கூடம் எனும் ஆய்வு அபிவிருத்திக்கான நிறுவனம் அரசுத்துறை, அரசசார்பற்ற நிறுவனங்களின் தற்கால அபிவிருத்தி திட்டங்களுக்கு வழிகாட்டும் நோக்கில் 'யாழ்ப்பாண மாவட்டத்தின் வளங்கள், பயன்பாடு, அபிவிருத்தி வழிமுறைகள்' எனும் தலைப்பிலான இருநாள் செயலமர்வை நடத்தவுள்ளது.

இச்செயலமர்வு நாளை சனிக்கிழமையும் நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்  யாழ். நாவலர் வீதியில் அமைந்துள்ள தியாகி அறக்கொடை நிலையக் கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ளது.          

எமது மக்களின் அபிவிருத்திப்பணி சிறக்க புலமையாளர்களும் திட்டமிடுவோரும் திட்டங்களை அமுல்படுத்துவோரும் ஒன்றுகூடும் இச்செயலமர்வில் பங்குகொள்ள விரும்புவோர் தன்னுடன் தொடர்பு கொள்ளும்படி சிந்தனைக்கூட செயலமர்வின் ஏற்பாட்டாளர் பேராசிரியர் இரா. சிவசந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X