Super User / 2011 ஜனவரி 29 , மு.ப. 05:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கவிசுகி, நவம்))
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வடமராட்சி கிழக்கு பதில் பொறுப்பாளர் இராசரத்தினம் சதீஷ் (வயது 36) இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று காலை நடைபெற்றுள்ளது. பருத்தித்துறை ஆனைவிழுந்தான் சந்தியில் இடம்பெற்றுள்ளது.
அவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருக்கும்போது இனந்தெரியாத நபர்கள் அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அவரின் சடலம் யாழ் மந்திகை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சடலத்தில் வெட்டுக்காயங்களும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
பருத்தித் துறை பொலிஸார் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
9 minute ago
12 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
14 minute ago
23 minute ago