2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

பருத்தித்துறை வீதியில் கனரக வாகன விபத்து; ஒரு பிள்ளையின் தந்தை பலி

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். பருத்தித்துறை வீதி கரவெட்டி தெற்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்ற  கனரக வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

இந்த விபத்துச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை நண்பகல் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற கனரக வாகனமொன்றே வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி குடும்பஸ்தர் மீது பாய்ந்துள்ளதுள்ளதாகவும் இதனால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு பிள்ளையின் தந்தையான சின்னத்துரை துரைராஜா (வயது 41)  இவ் விபத்தில் பலியானவராவார்

இவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X