Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 08 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். மாவட்டத்தில் உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் தழிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜக்கிய தேசியக் கட்சி மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தற்போது களத்தில் இறங்கியுள்ளன.
தழிழ் தேசியக் கூட்டமைப்பு கிராமம் கிராமாக தமது ஆதரவாளர்களுடன் சென்று தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒவ்வொரு வீடுகளுக்கும் சென்று தமது தேர்தலின் கொள்கை விளக்கவுரைகளையும் மக்களுக்கு தெளிவுபடுத்தி வருகின்றனர்
ஜக்கிய தேசியக் கட்சி காரைநகர், மனிப்பாய் மற்றும் வலி.வடக்குப் பகுதிகளுக்கு தமது ஆதரவாளர்களுடன் சென்று துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களிடம் கலந்துரையாடல்களை மேற்கொண்டு மக்கள் தேவைகள் குறித்து கேட்டறிவதாகத் தெரியவருகின்றது
மக்கள் விடுதலை முன்னணி தேர்தல் சுவரொட்டிகளை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது.
சுயேட்சைக் குழுக்களின் சில வேட்பாளர்கள் தமது விருப்பு எண்களை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தி கலந்துரையாடலில் ஈடுபடுவதில் அக்கறை காட்டி வருகின்றனர். தேர்தல் களத்திலுள்ள கட்சிகளும் சுயேட்சைக் குழுக்களும் பிரதேச ரீதியாக தேர்தல் விஞ்ஞாபனத்தையும் யாழ்ப்பாணத்தின் எதிர்கால அபிவிருத்தி தொடர்பான முன்மொழிகளையும் அடுத்த சில நாள்களில் மக்களுக்குப் பகிரங்கப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனாலும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி தங்களது தேர்தல் நடவடிக்கைகளில் எந்தவித ஈடுபாட்டையும் காட்டவில்லையென அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
5 minute ago
21 minute ago
32 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
21 minute ago
32 minute ago
3 hours ago