2025 டிசெம்பர் 22, திங்கட்கிழமை

யாழ்ப்பாணத்தில் தேக்கமடையும் கடல் உணவுகள்

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாக்கடலில் அதிகளவான கடலுணவுகள் பிடிக்கப்படுவதுடன், அவற்றை சந்தைப்படுத்த முடியாத நிலைமை தற்போது  ஏற்பட்டு;ள்ளதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் எஸ்.தவரட்ணம் தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக தென்பகுதிக்கான போக்குவரத்துக்கள் சீரின்மை காணப்படுவதால் பல இலட்சம் பெறுமதியான கடலுணவுகள் குளிரூட்டிகளில் வைத்து பாதுகாக்கப்படுகின்றது. இருப்பினும் அவற்றைப் பாதுகாப்பதற்கு போதிய வசதியின்மை காணப்படுவதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், சந்தை வாய்ப்பு இல்லாமையால் மீனவர்களுக்கு  போதிய வருவாய் கிடைப்பதில்லையெனவும் இதனால் கடற்றொழிலுக்கு செல்வதை மீனவர்கள் தவிர்த்து வருவதாகவும் வடமாகாண கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X