Menaka Mookandi / 2011 பெப்ரவரி 11 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ்ப்பாண மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஞாயிற்றுக் கிழமை மின்சார விநியோகம் தடை செய்யப்படும் என இலங்கை மின்சார சபையின் சுன்னாக மின்பொறியிலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், நாளை சனிக்கிழமை உரும்பிராய், கோண்டாவில், மருத்துவப்பீட பிரதேசம், திருநெல்வேலி பிரதேசம், பட்டணப்பகுதி நீங்கலாக யாழ்ப்பாண மாநகர சபை பகுதி, புன்னாலைகட்டுவன், அச்செழு, புத்தூர், ஆவரங்கால் அச்சுவெலி, இடைக்காடு, வடமராட்சிப் பிரதேசம் ஆகிய இடங்களில் மின்சார விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை, இணுவில், உடுவில், மருதனார்மடம். தாவடி, கொக்குவில், நாச்சிமார் கோவிலடி, ஆணைக்கோட்டை, நவாலி, மானிப்பாய், சங்குவெலி, கோண்டாவில், கொட்டடி, கோம்பயன்மணல் பிரதேசம் யாழ்ப்பாண பட்டணப்பகுதி ஆகியவற்றில் மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார விநியோக தடை எதிர்வரும் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய தினங்களில் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago