A.P.Mathan / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். பொதுநூலக சிறுவர் பகுதி புனரமைப்பு பணிக்கென சிங்கப்பூர் இன்ரநேசனல் பவுண்டேசன் நிறுவனம் மற்றும் தேசிய நூலக சபையினால் மூன்று மில்லியன் சிங்கப்பூர் டொலர் வழங்கப் படவுள்ளதாக யாழ். பொதுநூலக பிரதான நூலகர் எஸ்.தனபாலன் தெரிவித்துள்ளார்.
யாழ். பொதுநூலக சிறுவர் பகுதி புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதையடுத்து நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சிறுவர் பகுதியின் புதிய கட்டட புனரமைப்பு பணிகளிற்கு புலம்பெயர் தமிழர்கள் பலரும் உதவி வழங்கியுள்ளதுடன் பல்வேறு நிறுவனங்களால் 500இற்கும் மேற்பட்ட நூல்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அவர், புனரமைப்பு பணிகள் நிறைவுற்றதும் எதிர்வரும் ஜூலை மாதம் அளவில் இப்பகுதிக்கான திறப்புவிழா நடத்தப்படவுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.
6 minute ago
22 minute ago
33 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
22 minute ago
33 minute ago
3 hours ago