A.P.Mathan / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
யாழ். காரைநகர் உயர் பாதுகாப்பு வலயங்களுக்குட்பட்ட சில பகுதிகள் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.ஜெயசீலன் இன்று ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட காரைநகர் தெற்கு மற்றும் காரைநகர் தென்மேற்கு கிராமசேவையாளர் பிரிவுகளில் இதுவரை உயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த கிராமங்களான தோப்புக்காடு, மடத்துவளவு மற்றும் பலகாடு ஆகிய கிராமங்களே இவ்வாறு மக்கள் குடியிருப்பதற்காக விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட கிராமசேவையாளரூடாக காரைநகர் உதவி அரசாங்க அதிபர் பணிமனையுடன் தொடர்புகொள்ளுமாறும், காரைநகர் உதவி அரசாங்க அதிபர் இ.ஜெயசீலன் மேலும் தெரிவித்துள்ளார்.
1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago