A.P.Mathan / 2011 பெப்ரவரி 15 , பி.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் சீன உதவித்திட்டம் என்பவற்றின் கீழ் வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தித் திணைக்களம் என்பவற்றின் ஊடாக 37 வீதிகள் புனரமைப்புச் செய்யப்படவுள்ளதாக யாழ். மாவட்ட அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
திருமதி இமெல்டா சுகுமார் இது குறித்து மேலும் தெரிவித்தபோது...
'வீதிகளைப் புனரமைக்கும் செயற்றிட்டத்தினால் ஆசிய அபிவிருத்தி வங்கி, சீன உதவித்திட்டம் என்பவற்றின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதிமூலம் வடமாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபையினூடாக 14 வீதிகள் புனரமைக்கப்படவுள்ளன. பரந்தன், கரைச்சி - முல்லைத்தீவு வீதி, முல்லைத்தீவு - புளியங்குளம் வீதி என்பன உட்பட 14 வீதிகளும் சேர்ந்ததாக சுமார் 547.52 கிலோமீற்றர் நீளமான வீதிகளே இவ்வாறு புனரமைப்புச் செய்யப்படவுள்ளன' என்று குறிப்பிட்டார்.
9 minute ago
12 minute ago
14 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
14 minute ago
23 minute ago