Super User / 2011 பெப்ரவரி 20 , பி.ப. 04:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நடவடிக்கைகளையடுத்து தமிழ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குருநகரை சேர்ந்த நான்கு மீனவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் யாழ்ப்பாணம் வந்தடைவார்கள் என ஈ.பி.டி.பி தெரிவித்துள்ளது.
தமிழ் நாட்டை சேர்ந்த நாகை, புதுக்கோட்டை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளை சேர்ந்த கடற் தொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுவதில்லை என தீர்மானித்துள்ளனர்.
இதேவேளை, இன்று ஞாயிற்றுக்கிழமையே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக கடற் தொழிலாளர்கள் சங்க தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தொலைபேசி மூலமாகத் தெரிவித்தார்.
ராமேஸ்வரம் பகுதி கடற் தொழிலாளர்களிடம இலங்கை கடல் எல்லைக்குள் தொழிலில் ஈடுபட கூடாது என்பது தொடர்பில் நாளை பேச்சுவார்த்தை நடத்தப்படுமெனவும் அவர் அமைச்சரிடம் மேலும் குறிப்பிட்டார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago